தனியுரிமைக் கொள்கை

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

நீங்கள் StartupThamizha.tv தளத்தில் பதிவு செய்யும்போது, உங்கள் பெயர், முகவரி, மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தனித்துவமான அடையாள தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.

நீங்கள் StartupThamizha.tv தளத்தை பார்வையிடும்போது, உங்கள் கணினியின் இணைய அடையாள முகவரி (IP Address) தானாகவே எங்களுக்கு கிடைக்கப் பெறுகிறது, இது உங்கள் உலாவி (browser) மற்றும் இயக்க அமைப்பை (Operating System) பற்றி அறிய உதவுகிறது.

மின்னஞ்சல் விளம்பரம்: உங்கள் அனுமதியுடன், நாங்கள் எங்கள் தளத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றியும் மற்றும் பிற இயக்குநிலை மேம்பாடுகள் குறித்த தகவல்களை பற்றியும் உங்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படலாம்.

ஒப்புதல்

என் ஒப்புதலை எப்படிப் பெறுவீர்கள்?

நீங்கள் எங்கள் தளத்தில் பதிவு செய்து போது, உங்கள் மொபைல் எண்ணை சரிபார்ப்பதற்காக, அல்லது ஒரு சலுகையை பெறுவதற்காக நீங்கள் எங்களுக்கு தனித்துவமான அடையாள தகவல்களை அளிக்கும் போது, அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டுமே அதனை சேகரித்து பயன்படுத்த உங்கள் ஒப்புதலை நாங்கள் கருதுகிறோம்.

மார்க்கெட்டிங் போன்ற விரிவான நோக்கங்களுக்காக உங்களிடமிருந்து தனிப்பட்ட அடையாள தகவல்களை நாங்கள் கோரும்போது, நேரடியாகவும், தெளிவாகவும் உங்கள் ஒப்புதலை கேட்கிறோம்.

நீங்கள் இந்த தகவல்களை வழங்க மறுக்கும் உரிமையையும் உங்களுக்கு உறுதி செய்கிறோம். உங்கள் தெரிவுகளுக்கு மதிப்பு கொடுத்து, நீங்கள் வழங்கிய தகவல்கள் அந்த குறிப்பிட்ட நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

எனது ஒப்புதலை எப்படி திரும்பப் பெறுவது?

நீங்கள் ஒப்புதல் அளித்த பிறகு, உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டால், நீங்கள் எப்போதும் எங்களை தொடர்பு கொண்டு, உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறலாம்.

உங்கள் தகவலை நாங்கள் தொடர்ந்து சேகரிக்க, பயன்படுத்த அல்லது வெளியிடும் செயல்பாடுகளை நிறுத்துமாறு நீங்கள் வேண்டினால், எந்த நேரத்திலும், எங்கள் மின்னஞ்சலான hell hello@startupthamizha.tv முகவரில், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

வெளிப்படுத்தல்

சட்டத்தின்படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் அல்லது நீங்கள் எங்கள் சேவையின் விதிமுறைகளை மீறினால் உங்கள் தனித்துவமான அடையாள தகவல்களை நாங்கள் வெளிப்படுத்த நேரிடலாம்.

மூன்றாம் தரப்பு சேவைகள்

நாங்கள் பல்வேறு மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்தும்போது, அவர்கள் அளிக்கும் சேவைகளை திறம்பட நிர்வகிக்க அவசியமான தரவுகளை மட்டுமே சேகரிப்போம் மற்றும் பயன்படுத்துவோம்.

மேலும், அந்த தரவுகள் நம்பிக்கையுடன் கையாளப்படும் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் பரிமாணத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படும்.

நீங்கள் startupthamizha.tv இணையதளத்திலிருந்து வேறு இணையதளங்களுக்கு அல்லது பயன்பாடுகளுக்கு வெளியேறும்போது, அல்லது மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது பயன்பாடுகளுக்கு வழிநடத்தப்படும்போது, அவை எங்கள் தனியுரிமைக் கொள்கையின் அல்லது சேவை விதிமுறைகளின் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இணைப்புகள்

நீங்கள் எங்கள் தளத்தில் startupthamizha.tv உள்ள இணைப்புகளை கிளிக் செய்யும்போது, அந்த இணைப்புகள் உங்களை எங்கள் தளத்திலிருந்து பிற இணையதளங்களுக்கு வழிமாற்றலாம். இந்த வெளித்தளங்களின் தனியுரிமை நடைமுறைகள் மற்றும் அவர்களின் தனியுரிமை கொள்கைகளுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு அன்று.

நீங்கள் அந்த தளங்களில் உங்கள் தரவுகளை எவ்வாறு பாதுகாக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள அவர்களின் தனியுரிமை கொள்கைகளை கவனமாக படிக்க உங்களை ஊக்குவிக்கிறோம்.

பாதுகாப்பு

உங்கள் தனித்துவமான அடையாள தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாங்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நடவடிக்கைகள் உங்கள் தரவுகள் அனுமதியின்றி கையாளப்படுவது, பயன்படுத்தப்படுவது, அணுகப்படுவது, வெளியிடப்படுவது, மாற்றப்படுவது, அல்லது அழிக்கப்படுவது போன்ற செயல்கள் நிகழாமல் இருக்க எங்கள் தீவிர பாதுகாப்பு கொள்கை உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கின்றன.

குக்கீகள்

உங்கள் பயனர் கணக்கை பராமரிக்க, நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இது மற்ற இணையதளங்களில் உங்களை தனிப்பட்ட அளவில் அடையாளம் காணப் பயன்படுத்தப்படாது.

ஒப்புதல் வயது

இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் மாநிலத்தில் அல்லது உங்கள் வாழ்விடத்தில் உள்ள பெரும்பான்மை வயதை எட்டியவர் என்று உறுதி செய்கிறீர்கள்.

மேலும், பெரும்பான்மை வயதினை எட்டாத பயனாளர்கள் இந்த தளத்தை பயன்படுத்த அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ ஆதரவாளரின் சம்மதம் பெற்று எங்கள் தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

இந்த தனியுரிமைக் கொள்கையை எந்த நேரத்திலும் மாற்றியமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது, எனவே அதை அடிக்கடி மதிப்பாய்வு செய்ய உங்களை அறிவுறுத்துகிறோம்.

புதுப்பிப்புகள், திருத்தங்கள், மற்றும் தள உள்ளடக்கங்கள் அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகும்.

இந்தக் கொள்கையில் முக்கிய மாற்றங்கள் ஏதேனும் செய்தால், எங்கள் இணையதளத்தில் அதனை வெளியிடப்பட்ட உடனேயே அந்த மாற்றங்களும் அமுலுக்கு வரும்.

முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தால், திருத்தப்பட்ட கொள்கையின் நடைமுறையினால் எவ்வளவு தகவல்களைச் சேகரிக்கிறோம், அதை எப்படி பயன்படுத்துகிறோம், மற்றும் என்ன புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவோம்.

கேள்விகள் மற்றும் தகவல் தொடர்பு

நீங்கள் உங்கள் தனித்துவமான அடையாள தகவல்களை குறித்து அணுக, திருத்த, மாற்ற, புகார் செய்ய, அல்லது நீக்க விரும்பினால் அல்லது எங்கள் தனியுரிமைக் கொள்கையைக் குறித்து கேள்விகள் இருந்தால், நீங்கள் hello@startupthamizha.tv என்னும் மின்னஞ்சல் முகவரியில் எங்கள் தனியுரிமை சீர்திருத்த அதிகாரியை அணுகலாம்.

அலுவலக முகவரி: ஸ்டார்ட்அப் தமிழா எண். 35, திருமூர்த்தி நகர், கோடம்பாக்கம் ஹை ரோடு, சென்னை, தமிழ்நாடு - 600035.